டவுனில் தொழிலாளி மீது தாக்குதல்- நகை புரோக்கர் உட்பட 2 பேர் கைது
- சாலை அமைப்பதற்காக அப்பகுதியில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு உள்ளது.
- அங்கு நின்று கொண்டிருந்த ராஜாவிடம் தனக்கு உதவுமாறு சுந்தர் கேட்டுள்ளார்.
நெல்லை:
நெல்லை டவுன் வெள்ளந்தாங்கி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா. (வயது 35). இவர் அதே பகுதியில் உள்ள நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அப்பகுதியில் சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் சாலையின் குறுக்கே போக்குவரத்திற்கு இடையூறாக கிடந்த குழாயை அதே பகுதியை சேர்ந்த நகை புரோக்கரான சுந்தர் (வயது 48) என்பவர் ஓரமாக வைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது தனக்கு உதவுமாறு அங்கு நின்று கொண்டிருந்த ராஜாவிடம் சுந்தர் கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. சுந்தருக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த மேலும் 2 பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த சுந்தர் உட்பட 3 பேர் ராஜாவை கற்களை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் டவுன் போலீசார் சுந்தர், சிவராமன் (வயது 28) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.