தமிழ்நாடு செய்திகள்

கோவையில் சர்வதேச ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்தார் உதயநிதி

Published On 2025-12-30 10:53 IST   |   Update On 2025-12-30 10:54:00 IST
  • சாடிவயல் யானைகள் முகாம், தமிழ்நாடு வனத்துறை ஆவணக் காப்பகம் சேமிப்பகம் ஆகியவற்றை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
  • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

கோவை:

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று கோவை வந்தார்.

நேற்று மாலை திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டையில் நடந்த மகளிர் மாநாட்டில் பங்கேற்று பேசினார்.

அதனை தொடர்ந்து அவர் நேற்றிரவு கோவை வந்து தங்கினார். இன்று காலை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வடகோவையில் உள்ள தமிழ்நாடு வனக்கல்லூரியில் நடைபெற்ற தமிழ்நாடு வனப்படை நவீனமயமாக்கல் மற்றும் ஆயுதங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கோவை மாவட்டம் சிறுமுகை அடுத்த பெத்திக்குட்டையில் ரூ.19½ கோடியில் கட்டப்பட்டுள்ள வனவிலங்குகள் இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையம், சாடிவயல் யானைகள் முகாம், தமிழ்நாடு வனத்துறை ஆவணக் காப்பகம் சேமிப்பகம் ஆகியவற்றை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது அங்கு ரூ.9½ கோடியில் கட்டப்பட்டுள்ள ஹாக்கி மைதானத்தை அவர் திறந்து வைத்தார்.


Tags:    

Similar News