தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. கூட்டத்திற்கு போனா இனிமேல் கையோடு சவப் பெட்டியையும் கொண்டு போக வேண்டும்- கோவை சத்யன் காட்டம்

Published On 2026-02-13 16:55 IST   |   Update On 2026-02-13 16:55:00 IST
  • சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது.
  • இதில் ஏராளமானோர் கலந்து கொண்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.

சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற வெளி மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ் என்ற நபர் உயிரிழந்தார்.

கூட்டத்தில் பங்கேற்ற சூரஜ் திடீரென மயங்கி விழுந்தார். அப்போது திடீரென்று அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. முதலுதவி அளித்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் அதிமுக கட்சியைச் சேரந்த கோவை சத்யன், "தவெக கூட்டத்திற்கு போனா இனிமேல் கையோடு சவப் பெட்டியையும் கொண்டு போக வேண்டும் என்பது உறுதி" என விமர்சித்துள்ளார்.

கரூரில் விஜய் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கூட்ட நெரிசல் எற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை விஜய் நேரில் சென்று சந்திக்கவில்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தன.

இந்த நிலையில் தற்போது மற்றொரு கூட்டத்தில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

Tags:    

Similar News