தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு

Published On 2025-12-30 10:10 IST   |   Update On 2025-12-30 10:10:00 IST
  • சென்ட்ரல் மற்றும் விமான நிலையம் வழியாக நேரடியாக கோயம்பேட்டிற்கு மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
  • சிக்கலை தீர்க்க எங்கள் தொழில்நுட்பக் குழுக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்ட்ரல் மற்றும் விமான நிலையம் வழியாக கோயம்பேடு இடையேயான நேரடி ரெயில் சேவை மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சென்ட்ரல் மற்றும் விமான நிலையம் வழியாக நேரடியாக கோயம்பேட்டிற்கு மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கிரீன் லைன் (அண்ணா நகர், கோயம்பேடு வழியாக) வழியாக விமான நிலையத்திற்கு பயணிக்கும் பயணிகள் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் இன்டர்சேஞ்ச் செய்து, ப்ளூ லைன் விமான நிலைய சேவைகளைப் பயன்படுத்தி தங்கள் பயணத்தைத் தொடருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதேபோல், க்ரீன் லைனில் இருந்து ப்ளூ லைனுக்கு பயணிக்கும் பயணிகளும் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் இன்டர்சேஞ்ச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இன்டர்-காரிடர் சேவையைத் தவிர, கிரீன் லைன் மற்றும் ப்ளூ லைன் ரெயில்கள் இரண்டும் வார நாட்களின் அட்டவணையின்படி வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.

சிக்கலை தீர்க்க எங்கள் தொழில்நுட்பக் குழுக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. மேலும் கூடுதல் புதுப்பிப்புகள் விரைவில் பகிரப்படும். ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News