செய்திகள்

எதை வைத்து கோடநாடு விவகார வீடியோ ஆதாரப்பூர்வமானது என்று கூறுகிறார்கள்? - பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

Published On 2019-01-15 15:25 IST   |   Update On 2019-01-15 15:25:00 IST
எதை வைத்து கோடநாடு விவகார வீடியோ ஆதாரப்பூர்வமானது என்று கூறுகிறார்கள்? என மத்திய மந்திரி பொன்ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார். #kodanadvideo #ponradhakrishnan #parliamentelection
சென்னை:

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய கூட்டணியை பாஜக உறுதியாக அமைக்கும். பாஜக கூட்டணி தான் தமிழகத்தில் அதிகப்படியான இடங்களை கைபற்றும்.

நாற்பதும் நமதே நாடும் நமதே என்ற நிலைக்கு உயர்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளன. எதை வைத்து கோடநாடு விவகார வீடியோ ஆதாரப்பூர்வமானது என்று கூறுகிறார்கள்? தேர்தல் வரும் நேரத்தில் யார் மீதும் சகதியை பூசுவார்கள்; மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

தேர்தல் நேரத்தில் குற்றம் சாட்டுபவர்கள் ஆதாரங்களை வைத்துக்கொண்டு குற்றம்சாட்ட வேண்டும் என கூறினார்.  #kodanadvideo #ponradhakrishnan #parliamentelection
Tags:    

Similar News