இந்தியா
வாரணாசியில் சப்-இன்ஸ்பெக்டரை அறைந்த கவுன்சிலர் மகன்: சுற்றி வளைத்து தர்ம கொடுத்த பொதுமக்கள்
- நோ-பார்க்கிங் இடத்தில் வாகனத்தை நிறுத்தியதால் தகராறு.
- சப்-இன்ஸ்பெக்டர் எனக்கூட பார்க்காமல் பொது இடத்தில் வைத்து அடித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் கவுன்சிலராக (ஹுகுல்கஞ்ச்) இருப்பவர் சந்திர ஸ்ரீனிவாஸ்தவா. இவரது மகன் நேற்று சவுக் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், வாகனங்களை நிறுத்த தடை செய்யப்பட்ட பகுதியில் வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
அப்போது, சப்-இன்ஸ்பெக்டர் இங்கே வாகனத்தை நிறுத்தக் கூடாது எனக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பேசிக் கொண்டிருக்கும்போதே, சற்றென்று சப்-இன்ஸ்பெக்டரை கவுன்சிலர் மகன் பளார் என அறைந்துள்ளார்.
இதனால் சப்-இன்ஸ்பெக்டரும், அங்கிருந்த மக்களும் அதிர்ச்சியடைந்தனர். பொதுமக்கள் ஒன்று கூடி கவுன்சிலர் மகனை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அவரை போலீசார் பொதுமக்களிடம் இருந்து மீட்டனர்.
கவுன்சிலர் மகன் மீது வழக்குப்பதிவு செய்து, சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.