இந்தியா

அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பான விசயங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்: வர்த்தக அமைச்சகம்

Published On 2026-02-21 16:48 IST   |   Update On 2026-02-21 16:48:00 IST
  • வரி விதிப்பு தொடர்பான அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் கவனித்துள்ளோம்.
  • சில நடவடிக்கை அமெரிக்கா நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு வரி விதிப்பை அமல்படுத்தினார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 18 சதவீதம் வரி விதித்தார். இது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையில் தற்காலிக வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டது.

இந்த நிலையில்தான் நேற்று, அமெரிக்கா உச்சநீதிமன்றம் டொனால்டு டிரம்பின் வரி விதிப்பு செல்லாது. அவ்வாறு உத்தரவிட அவருக்கு அதிகாரமில்லை என அதிரடி தீர்ப்பை வழங்கியது.

இதனால் 150 நாட்களுக்கு தற்காலிகமாக 10 சதவீதம் பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும், இது 24-ந்தேதியில் இருந்து அமல்படுத்தப்படும் எனக் கூறியுள்ளார்.

இந்தியா- அமெரிக்கா இடையிலான தற்காலிக ஒப்பந்தத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், தற்போது நீதிமன்ற தீர்ப்பு வந்த நிலையில் மோடி சமரசம் செய்து விட்டதாக சாடியுள்ளது.

இந்த நிலையில் இந்திய வர்த்தக அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள தகவலில் "வரி விதிப்பு தொடர்பான அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் கவனித்துள்ளோம். இது தொடர்பாக டொனால்டு டிரம்ப் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியுள்ளார். சில நடவடிக்கை அமெரிக்கா நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அனைத்து விசயங்களையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளது.

Tags:    

Similar News