இந்தியா

டெல்லியில் பிரதமர் மோடி - பிரேசில் அதிபர் பேச்சுவார்த்தை

Published On 2026-02-21 14:12 IST   |   Update On 2026-02-21 14:12:00 IST
  • பிரேசில் அதிபர் மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
  • டெல்லியில் நடந்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பிரேசில் அதிபர் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்டார்.

புதுடெல்லி:

பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா இந்தியாவுக்கு வந்து உள்ளார். அவர் டெல்லியில் நடந்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி-பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வர்த்தகம், பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

முன்னதாக பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, ராஜ் காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பிரேசில் அதிபரை ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வரவேற்றனர். பின்னர் பாரம்பரிய வரவேற்பை லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா ஏற்றுக்கொண்டார். 

Tags:    

Similar News