மாதம் ரூ.1,500.. மகாராஷ்டிராவில் மகளிர் உதவித் தொகை பயனாளிகளில் 90 லட்சம் பெண்கள் நீக்கம்
- தேர்தலில் பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின் இந்த திட்டத்தை தொடர்ந்தது.
- பிற அரசுத் திட்டங்களில் பயன் பெறும் பெண்களுக்கு ரூ.500 மட்டுமே வழங்கப்படுகிறது.
மகாராஷ்டிராவில் கடந்த 2024 நவம்பரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு சில மாதங்கள் முன் ஆளும் பாஜக கூட்டணி அரசு பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கும் லட்கி பாஹின் யோஜ்னாவை அறிமுகம் செய்தது.
நவம்பரில் நடந்த தேர்தலில் பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின் இந்த திட்டத்தை தொடர்ந்தது.
ஆனால் இந்த திட்டத்தின் கீழ், 2024 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு 2.4 கோடியாக இருந்த பெண் பயனாளிகளின் எண்ணிக்கை, 2025 டிசம்பரில் 1.57 கோடியாக குறைப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் 90 லட்சம் பெண்கள் இந்த திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
தீவிர சரிபார்ப்பு பணி, வங்கிக் கணக்கில் ஆதார் இணைக்கும் e-KYC செயல்முறையில் குளறுபடி எனக் கூறி பயனாளிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் பிற அரசுத் திட்டங்களில் பயன் பெறும் பெண்களுக்கு, இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.1,500-ல் இருந்து ஒரு பகுதி குறைக்கப்பட்டு, நிகர தொகையாக ரூ.500 மட்டுமே வழங்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.