இந்தியா

நக்சலைட்டுகளை போல ஊடுருவல்காரர்களும் ஒழிக்கப்படுவார்கள் - அசாமில் அமித் ஷா சூளுரை

Published On 2026-02-21 21:43 IST   |   Update On 2026-02-21 21:43:00 IST
  • காங்கிரஸ் கட்சிக்கு ஊடுருவல்காரர்களே வாக்கு வங்கி.
  • ராகுல் காந்திக்கு துணிவிருந்தால் செய்ய வேண்டும்.

அசாம் மாநிலம் காம்ரூப் பகுதியில் காவல்துறை பட்டாலியன் புதிய வளாகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் இன்று அடிக்கல் நாடினார்.

இந்த நிகழ்வில் பேசிய அவர், "மார்ச் 31 க்குள் நாட்டில் இருந்து நக்சலிசம் முழுமையாக ஒழிக்கப்படும். நக்சலைட்டுகளை ஒழிப்பதைப் போலவே ஊடுருவல்காரர்களையும் ஒழிப்பது சாத்தியமே. ஊடுருவல்காரர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது மட்டுமல்ல, 2031 க்குள் அவர்களை நாட்டை விட்டே விரட்டுவோம்.

 ஊடுருவல்காரர்கள் ஒரு இடத்தை ஆக்கிரமித்து அங்கிருந்து விரட்டப்பட்டால், மற்றொரு இடத்தில் குடியேறுகிறார்கள். எனவே, அவர்களை நிரந்தரமாக நாட்டை விட்டு வெளியேற்றுவதே தீர்வு.

காங்கிரஸ் கட்சிக்கு ஊடுருவல்காரர்களே வாக்கு வங்கி என்பதால், அவர்களை வெளியேற்ற காங்கிரஸ் ஒருபோதும் முன்வராது.

ராகுல் காந்திக்கு துணிவிருந்தால், ஊடுருவல்காரர்களை வெளியேற்றுவது குறித்துத் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட வேண்டும்" என்று சவால் விடுத்தார்.  

Tags:    

Similar News