செய்திகள்

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை நிறைவேற்ற கூடாது - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

Published On 2018-12-27 23:25 GMT   |   Update On 2018-12-27 23:25 GMT
தேசிய மருத்துவ ஆணையம் என்ற மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற கூடாது என டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார். #TTVDinakaran

சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956-ன் படி இயங்கி வரும் மருத்துவ கல்வி மற்றும் மருத்துவர்களை ஒழுங்குபடுத்தும் தன்னாட்சி பெற்ற அமைப்பாக இயங்கி வந்த இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு, மத்திய அரசின் முழு கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய வகையில் தேசிய மருத்துவ ஆணைய மசோதா-2017 தற்போது நடைபெற்றுவரும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



கிராமப்புற மாணவர்களுக்கு இது பெரும் சுமையை ஏற்படுத்தும். ஏற்கனவே, நீட் என்கின்ற அடியிலிருந்து மீளாத அதிர்ச்சியில் நாம் உள்ள நிலையில், தற்போது தேசிய மருத்துவ ஆணையம் என்ற பேரிடியை நம் தலையில் இறக்க மத்திய அரசு தீர்மானித்துவிட்டது. எல்லா அதிகாரங்களையும் மாநிலத்திடமிருந்து பறித்து விழுங்கவேண்டும் என மத்திய அரசு நினைப்பது கண்டனத்திற்குரியது. அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேறாமல் தடுக்கவேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.#TTVDinakaran
Tags:    

Similar News