தமிழ்நாடு செய்திகள்

பாட்டிலுக்கு ரூ.10 ரீஃபண்ட்... சென்னையில் நாளைமுதல் திரும்ப பெறப்படும் காலி மதுபாட்டில்கள்!

Published On 2026-01-05 17:21 IST   |   Update On 2026-01-05 17:21:00 IST
  • காலி மதுபாட்டில்களைத் திரும்ப அதே மதுபான விற்பனைக் கடையில் ஒப்படைக்கும் போது ஏற்கனவே செலுத்திய ரூ.10/-ஐ திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
  • இத்திட்டத்தின் நோக்கம், காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசி சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுப்பதாகும்

சென்னையில் நாளை (ஜன.06) முதல் காலி மதுபாட்டில்களை டாஸ்மாக்கில் திரும்பப் பெறும் திட்டம் அமலாகிறது. காலி மதுபாட்டில்களை திருப்பி ஒப்படைக்கும்போது ரூ.10 திருப்பி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், "டாஸ்மாக் லிட், சென்னை (வடக்கு, தெற்கு, மத்தியம்) மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் 06-01-2026 முதல் அமல்படத்தப்பட உள்ளது.

வாடிக்கையாளர்கள் மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அவற்றை மதுபானக் கடைகளிலேயே திரும்பப் பெறும் திட்டத்தின்படி, மதுபாட்டில்களை வாங்கும் போது மதுபாட்டில் ஒன்றுக்கு ரூ.10/- கூடுதலாகப் பெற்று மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களைத் திரும்ப அதே மதுபான விற்பனைக் கடையில் ஒப்படைக்கும் போது ஏற்கனவே செலுத்திய ரூ.10/-ஐ திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். 

இத்திட்டத்தின் நோக்கம், காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசி சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுப்பதாகும்" என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News