என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Empty liquor bottles"

    • காலி மதுபாட்டில்களைத் திரும்ப அதே மதுபான விற்பனைக் கடையில் ஒப்படைக்கும் போது ஏற்கனவே செலுத்திய ரூ.10/-ஐ திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
    • இத்திட்டத்தின் நோக்கம், காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசி சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுப்பதாகும்

    சென்னையில் நாளை (ஜன.06) முதல் காலி மதுபாட்டில்களை டாஸ்மாக்கில் திரும்பப் பெறும் திட்டம் அமலாகிறது. காலி மதுபாட்டில்களை திருப்பி ஒப்படைக்கும்போது ரூ.10 திருப்பி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இது தொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், "டாஸ்மாக் லிட், சென்னை (வடக்கு, தெற்கு, மத்தியம்) மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் 06-01-2026 முதல் அமல்படத்தப்பட உள்ளது.

    வாடிக்கையாளர்கள் மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அவற்றை மதுபானக் கடைகளிலேயே திரும்பப் பெறும் திட்டத்தின்படி, மதுபாட்டில்களை வாங்கும் போது மதுபாட்டில் ஒன்றுக்கு ரூ.10/- கூடுதலாகப் பெற்று மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களைத் திரும்ப அதே மதுபான விற்பனைக் கடையில் ஒப்படைக்கும் போது ஏற்கனவே செலுத்திய ரூ.10/-ஐ திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். 

    இத்திட்டத்தின் நோக்கம், காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசி சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுப்பதாகும்" என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பல்லடம் நகராட்சி அலுவலக சுகாதார வளாக பகுதியில் காலி மதுபான பாட்டில்கள் போடப்பட்டுள்ள காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    • கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    பல்லடம்:

    பல்லடம் நகராட்சி அலுவலக சுகாதார வளாக பகுதியில் காலி மதுபான பாட்டில்கள் போடப்பட்டுள்ள காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அங்கு வைக்கப்பட்டுள்ள பழைய விளம்பர பதாகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தின் மீது காலி மது பாட்டில்கள் வீசப்பட்டுள்ள சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நகராட்சி ஆணையாளரிடம் கேட்டபோது விடுமுறை நாளில் மதுபான பாட்டில்கள் போட்டது யார் என்பது தெரியவில்லை. கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    ×