தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டில் டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்பட 20 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Published On 2026-02-28 18:40 IST   |   Update On 2026-02-28 18:40:00 IST
  • டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டார்.
  • டிஜிபி அலுவலகத்தின் நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜி.யாக ரயில்வே ஐஜி பாபு நியமனம்

தமிழ்நாட்டில் டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்பட 20 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டார். சென்னை ஆயுதப்படை டிஜிபி பொறுப்பையும் அவர் கூடுதலாக கவனித்துக் கொள்வார் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது

ஆவடி காவல் ஆணையரக கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி, சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தாம்பரம் காவல் ஆணையரக சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக ஜெயந்தி ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

டிஜிபி அலுவலகத்தின் நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜி.யாக ரயில்வே ஐஜி பாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜெயராமன், சென்னை ஊர்க்காவல் படை ஏடிஜிபி ஆக மாற்றபட்டுள்ளார்.

செங்கல்பட்டு, ராணிப்பேட்டை எஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை எஸ்.பி.யாக சிபின், செங்கல்பட்டு எஸ்.பி.யாக ஐமன் ஜமாலை நியமனம் செய்யப்பட்டுள்ளனர்

Tags:    

Similar News