என் மலர்
நீங்கள் தேடியது "Police Officers Transfer"
- மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக இருந்த செந்தில்குமாரி மாற்றப்பட்டார்.
- தினகரன் சிலை தடுப்பு பிரிவில் கூடுதல் பொறுப்புக்கு பணியமர்த்தப்பட்டுள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் இன்று 15 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிலை தடுப்பு பிரிவு டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் போலீஸ் வீட்டு வசதி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு ஐ.ஜி.யாக பணியாற்றிய டாக்டர் தினகரன் சிலை தடுப்பு பிரிவில் கூடுதல் பொறுப்புக்கு பணியமர்த்தப்பட்டுள்ளார்.
மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக இருந்த செந்தில்குமாரி மாற்றப்பட்டு அந்த பதவிக்கு ராதிகா நியமிக்கப்பட்டுள்ளாார். வடசென்னை இணை கமிஷனராக பிரவேஷ்குமார், சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனராக சரோஜ்குமார் தாகூர் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.






