தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இன்னும் 10 நாட்களில் முதலமைச்சரிடம் வழங்கப்படும்: கனிமொழி எம்.பி.
- மற்றவர்களுக்கு பதில் சொல்லக்கூடிய வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்க வேண்டிய அவசியம் தி.மு.க.விற்கு கிடையாது.
- யார் தேர்தல் அறிக்கை தயாரித்து வெளியிட்டாலும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையைதான் மக்கள் நம்புவார்கள்.
சென்னை விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இன்னும் 10 நாட்களில் முழுமை பெற்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கப்படும்.
காங்கிரஸ் கட்சி இன்று தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அழைத்திருக்கிறோம். நிச்சயமாக விரைவில் இறுதி செய்யப்படும். திராவிடக் கருத்துக்களை முன்னெடுத்து செல்லும் ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின் என்ற நம்பிக்கையாலும் தி.மு.க.வின் மீது உள்ள நம்பிக்கையாலும் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டு உள்ளார். இதன் மூலம் யார் உண்மையான திராவிட இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார், திராவிட மாடல் ஆட்சியை தரக்கூடியவர்கள் யார் என தெளிவாக மக்களுக்கு தெரிந்து விட்டது.
மற்றவர்களுக்கு பதில் சொல்லக்கூடிய வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்க வேண்டிய அவசியம் தி.மு.க.விற்கு கிடையாது. யார் தேர்தல் அறிக்கை தயாரித்து வெளியிட்டாலும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையைதான் மக்கள் நம்புவார்கள். மக்கள் எதை எதிர்பார்க்கிறார்களோ அதை தேர்தல் அறிக்கையாக தி.மு.க. வெளியிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.