செய்திகள்

பரங்கிமலை ரெயில் விபத்தில் 4 பேர் உயிரிழப்பு - தலா ஒரு லட்சம் நிவாரணமாக அறிவித்தார் முதல்வர்

Published On 2018-07-24 15:56 IST   |   Update On 2018-07-24 15:56:00 IST
சென்னை பரங்கிமலை பகுதியில் மின்சார ரெயிலில் படிகட்டில் பயணம் செய்து உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா 1 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். #ElectricTrainAccident #CM
சென்னை:

சென்னையில் மின்சார ரெயில் போக்குவரத்து எளிதானதும், செலவு குறைவானதும் ஆகும். இதனால் பொதுமக்கள் அதிகமாக இந்த ரெயில் சேவையை உபயோகித்து வருகின்றனர். ஆனால், ரெயில்களின் எண்ணிக்கை குறைவு மற்றும் குறைவான ரயில் பெட்டிகளால் பொதுமக்கள் அவதியுறுவதாக அடிக்கடி புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், படிகட்டுகளில் பயணம் செய்வதும், விபத்துக்கள் நிகழ்வதும் அவ்வப்போது நிகழ்கிறது.

இந்நிலையில், இன்று காலை பரங்கி மலை ரெயில் நிலையத்தில் உள்ள தடுப்பு சுவரில் மோதி, படிகட்டில் பயணம் செய்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இதையடுத்து, இந்த விபத்து தொடர்பாக இரங்கல் தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக அறிவித்துள்ளார். மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமும் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #ElectricTrainAccident #CM
Tags:    

Similar News