உலகம்

கராச்சி வணிக வளாக தீ விபத்து - பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு

Published On 2026-01-22 13:05 IST   |   Update On 2026-01-22 13:05:00 IST
  • 31 பேர் பலியாகி இருந்த நிலையில் 60-க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருந்தனர்.
  • கட்டிடத்தின் தரைத்தளம் மற்றும் பல அடுக்கு அமைப்புகள் மிகவும் சிக்கலான முறையில் இருந்தது.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள எம்.ஏ.ஜின்னா சாலையில் 'குல் பிளாசாவில்' என்ற அடுக்குமாடி வணிக வளாகம் அமைந்துள்ளது.

இங்கு கடந்த 17-ந்தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 31 பேர் பலியாகி இருந்த நிலையில் 60-க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருந்தனர்.

இந்த நிலையில் ஒரே கடையில் 30 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 61-ஆக உயர்ந்துள்ளது.

கட்டிடத்தின் தரைத்தளம் மற்றும் பல அடுக்கு அமைப்புகள் மிகவும் சிக்கலான முறையில் இருந்ததால், மீட்புக் குழுவினர் உள்ளே செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

விசாரணையில் மின்கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கடைகளில் வைக்கப்பட்டிருந்த ஆடைகள், பிளாஸ்டிக் பொருட்களால் தீ வேகமாகப் பரவியது. தீ விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News