உலகம்
null

ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு வாழ்த்து தெரிவித்த புதின்: அசைக்கமுடியாத ஆதரவு எனவும் அறிவிப்பு..!

Published On 2026-03-09 21:17 IST   |   Update On 2026-03-09 22:19:00 IST
  • அயதுல்லா காமேனி மகன் புதிய உச்ச தலைவர் என ஈரான் முறையாக அறிவித்தது.
  • ரஷிய அதிபர் புதின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை கூட்டாக கடந்த மாதம் 18-ந்தேதி (சனிக்கிழமை) ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் அவரது மகன் மொஜ்தபா காமேனி புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஈரான் பாராளுமன்ற நிபுணர்கள் குழு இவரை புதிய தலைவராக தேர்வு செய்துள்ளனது. ஈரான் ராணுவம் மற்றும் அரசியல் தலைவர்கள் மொஜ்தபாவுக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

இந்த நிலையில் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மொஜ்தபாவுக்கு வாழ்த்துகள். ரஷியா தொடர்ந்து ஈரானுக்கு துணை நிற்கும். ஈரானுக்கு அசைக்க முடியாத ஆதரவு மற்றும் நமது ஈரானிய நண்பர்களுடன் ஒற்றுமையை உறுதிப்படுத்த விரும்புவதாக புதின் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News