உலகம்

பாகிஸ்தானில் ராணுவ அலுவலகம் மீது தாக்குதல்: இம்ரான்கான் ஆதரவாளர்களுக்கு 10 ஆண்டு சிறை

Published On 2026-03-09 08:25 IST   |   Update On 2026-03-09 08:25:00 IST
  • இம்ரான்கானின் கட்சியைச் சேர்ந்த 47 முக்கியத் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை.
  • அவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் கடந்த 2023-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டபோது, அவரது ஆதரவாளர்கள் நாடு தழுவிய அளவில் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராவல்பிண்டியில் உள்ள ராணுவத் தலைமையகம் மீது தாக்குதல் நடத்தியது மற்றும் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியதாகப் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதனை விசாரித்த கோர்ட்டு, இம்ரான்கானின் கட்சியைச் சேர்ந்த 47 முக்கியத் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என அக்கட்சியின் ஆதரவாளர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர். ஏற்கனவே இம்ரான்கான் ஊழல் வழக்குகளில் சிறையில் இருக்கும் நிலையில், இந்த தீர்ப்பு பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News