உலகம்

சுவிட்சர்லாந்தில் பஸ்சில் தீப்பிடித்து 6 பேர் பலி

Published On 2026-03-11 12:49 IST   |   Update On 2026-03-11 12:49:00 IST
  • பயணிகள் பஸ்சில் இருந்து வெளியேற முயன்றபோது தீ கொளுந்துவிட்டு எரிந்தது.
  • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை கடுமையாக போராடி அணைத்தனர்.

சுவிட்சர்லாந்து தலைநகர் பெர்னின் மேற்கே உள்ள கெர்சர்ஸ் நகரில் ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சில் திடீரென்று புகை வந்தது. சிறிது நேரத்தில் பஸ் தீப்பிடித்து எரிந்தது. பயணிகள் பஸ்சில் இருந்து வெளியேற முயன்றபோது தீ கொளுந்துவிட்டு எரிந்தது. இதனால் சில பயணிகள் பஸ்சுக்குள் சிக்கி கொண்டனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை கடுமையாக போராடி அணைத்தனர்.

இந்த விபத்தில் 6 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News