உலகம்

Iran War | இலங்கையில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு

Published On 2026-03-11 08:51 IST   |   Update On 2026-03-11 08:51:00 IST
  • உலகநாடுகளில் பெட்ரோல்-டீசல் மற்றும் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
  • அண்டை நாடான இலங்கையில் பெட்ரோல்-டீசல் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.

கொழும்பு:

வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதனால் உலகநாடுகளில் பெட்ரோல்-டீசல் மற்றும் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விலையை உலக நாடுகள் கணிசமாக உயர்த்தி வருகின்றன. அதன்படி அண்டை நாடான இலங்கையில் பெட்ரோல்-டீசல் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.

பெட்ரோல் விலை இலங்கை மதிப்பில் லிட்டருக்கு ரூ.25 உயர்ந்து ரூ.366 ஆக உயர்ந்தது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.22 உயர்ந்து ரூ.353 ஆனது. மண் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.13 அதிகரித்து ரூ.195 ஆனது. மக்களின் பீதி மற்றும் பதுக்கல்களைத் தவிர்க்கும் நோக்கில், நள்ளிரவு முதல் இந்த விலை மாற்றம் அமலுக்கு வந்தது.

Tags:    

Similar News