உலகம்

Fuel Shortage | எரிவாயு தட்டுப்பாடு - பாகிஸ்தானில் பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை

Published On 2026-03-10 14:35 IST   |   Update On 2026-03-10 14:35:00 IST
  • கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
  • அரசு அதிகாரிகளுக்கான பெட்ரோல், டீசல் ஒதுக்கீடு 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்:

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே பாகிஸ்தானில் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அறிவித்து உள்ளார்.

மேலும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளுக்கான பெட்ரோல், டீசல் ஒதுக்கீடு 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மந்திரிகளின் பாதுகாப்பு வாகனங்கள் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. வங்கியைத் தவிர அரசு அலுவலகங்கள் அனைத்தும் வாரத்தில் 4 நாட்கள் மட்டும், 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News