உலகம்

#Trump ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும் - டிரம்ப் உறுதி

Published On 2026-03-10 06:35 IST   |   Update On 2026-03-10 06:35:00 IST
  • டோரல் நேஷனல் கோல்ஃப் கிளப்பில் செய்தியாளர்களிடம் பேசினார்.
  • அவர்களிடம் உள்ள அனைத்தும் போய்விட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் போர் விரைவில் முடிவடையும் என்று தெரிவித்தார், ஆனால் மத்திய கிழக்கு மற்றும் உலகப் பொருளாதாரத்தை உலுக்கிய தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான காலக்கெடுவில் தெளிவற்றத நிலையிலேயே இருந்தார்.

சி.பி.எஸ். செய்தி நிறுவனத்திற்கு அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், "அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல் மிகவும் முழுமையானது என்று டிரம்ப் கூறியபோது பங்கு சந்தைகள் உயர்ந்தன. எனினும், பத்திரிகையாளர் சந்திப்பின் போது அவர் என்ன எதிர்பார்க்கலாம் என்பது குறித்து மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்தார்.

புளோரிடாவின் மியாமிக்கு அருகிலுள்ள தனது டோரல் நேஷனல் கோல்ஃப் கிளப்பில் செய்தியாளர்களிடம் பேசும் போது ஈரான் போர் முடிவுக்கு வருவது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த டிரம்ப், "நான் விரைவில், மிக விரைவில் போர் முடிவுக்கு வரும் என நினைக்கிறேன், அவர்களது தலைமை உள்பட அவர்களிடம் உள்ள அனைத்தும் போய்விட்டது," என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய டிரம்ப் ஹார்முஸ் நீரினை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருவது பற்றிய கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, "ஈரான் அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டா், அவர்கள் மீதான தாக்குதல் மேலும் தீவிரமடையும். நாம் அவர்களை மிகவும் கடுமையாகத் தாக்குவோம், அவர்கள் ஏதாவது செய்தால் கூட, அவர்களாலோ அல்லது அவர்களுக்கு உதவும் வேறு யாராலோ உலகின் அந்தப் பகுதியை ஒருபோதும் மீட்டெடுக்க முடியாது.

போர் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவே நான் நினைக்கிறேன். அவர்களிடம் கடற்படை இல்லை, தகவல் தொடர்பு இல்லை, விமானப்படை இல்லை. அவர்களின் ஏவுகணைகள் சிதறடிக்கப்பட்டுள்ளன. அவர்களின் ட்ரோன்கள் எல்லா இடங்களிலும் வெடிக்கப்படுகின்றன, அவர்களின் ட்ரோன் உற்பத்தி உட்பட. நீங்கள் பார்த்தால், அவர்களிடம் எதுவும் மிச்சமில்லை. இராணுவ அர்த்தத்தில் எதுவும் மிச்சமில்லை," என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News