உலகம்

Iran War | நாட்டை பிரிக்கவும், எண்ணெயை எடுக்கவும் அமெரிக்கா விரும்புகிறது: ஈரான் குற்றச்சாட்டு

Published On 2026-03-09 20:35 IST   |   Update On 2026-03-09 20:35:00 IST
  • பிப்ரவரி 28-ந்தேதி அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலை தொடங்கியது.
  • இன்று 10-வது நாளாக தாக்குதல் தொடர்கிறது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகின்ற. கடந்த சனிக்கிழமை இந்த தாக்குதல் தொடங்கப்பட்டது. முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.

இதனால் கோபம் அடைந்த ஈரான் பயங்கரமாக வகையில் பதிலடி கொடுத்து வருகிறது. வளைகுடா நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே அயதுல்லா அலி காமேனியின் மகன் மொஜ்தபா காமேனியை புதிய உச்ச தலைவராக ஈரான் தேர்ந்தெடுத்துள்ளது.

அவருக்கு விசுவாசமாக இருப்போம் என் ராணுவம் மற்றும் அரசியல் தலைவர்கள் ஒன்று கூடி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிலையில் நாட்டை பிரிக்கவும், எண்ணெயை எடுக்கவும் அமெரிக்கா விரும்புகிறது என்று ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

அயதுல்லா அலி காமேனியை கொன்று விட்டால் ஈரான் சரணடைந்துவிடும் என்று அமெரிக்கா மற்றும் ஈரான் கணக்கு போட்டன. தற்போது அந்த கணக்கு தப்பாகிவிட்டது. ஈரான் புதிய உச்ச தலைவரை தேர்ந்தெடுத்துள்ளது. புதிய தலைவரை தேர்ந்தெடுந்தால் அவர்களையும் கொலை செய்வோம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் எந்தவொரு எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

Tags:    

Similar News