ஈரான், உக்ரைன் போர்களுக்கு மத்தியில் டிரம்ப் - புதின் போனில் பேச்சு | Trump-Putin

இருவரும் ஒரு மணி நேரம் தொலைபேசியில் ஆலோசித்தனர்.மொஜ்தாபா காமேனி குறித்தும் பேசினர்.
ஈரான், உக்ரைன் போர்களுக்கு மத்தியில் டிரம்ப் - புதின் போனில் பேச்சு | Trump-Putin
Published on

ஈரான், உக்ரைன் போர்களுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷிய அதிபர் புதின் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் உக்ரைன் விவகாரம் குறித்தும் இருவரும் ஒரு மணி நேரம் தொலைபேசியில் ஆலோசித்தனர்.

ஈரானின் போரை அரசியல் மற்றும் ராஜதந்திர ரீதியில் விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று புதின் வலியுறுத்தினார். போரை விரைவாக முடிப்பதற்கான சில ஆலோசனைகளை புதின் டிரம்பிடம் பகிர்ந்துள்ளார்.

உக்ரைன் விவகாரத்தில் போர்நிறுத்தம் கொண்டு வருவதற்கான டிரம்பின் முயற்சிகளை பாராட்டிய புதின் தற்போதைய களநிலவரம் குறித்து விளக்கினார். 

ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தாபா காமேனி பொறுப்பேற்றுள்ள நிலையில், அவர் குறித்தும் இருவரும் பேசியுள்ளனர்.

ஈரானில் நடக்கும் போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இந்தப் போர் காரணமாக உலகளவில் எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 114 டாலரைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com