இந்தியா
குழம்பு நன்றாக இல்லை என கூறிய கணவனின் நாக்கை கடித்து துண்டாக்கிய மனைவி
- 6 மாதங்களுக்கு முன்பு விபின் குமார் என்பவருக்கும் இஷா என்பவருக்கும் திருமணம் நடந்தது
- இஷா சமைத்த முட்டை குழம்பு நன்றாக இல்லை என்று விபின் குறை சொல்லியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் தான் சமைத்த முட்டை குழம்பை `சுவையாக இல்லை' என்று கூறியதால், கணவனின் நாக்கை கடித்து மனைவி துண்டாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
6 மாதங்களுக்கு முன்பு விபின் குமார் என்பவருக்கும் இஷா என்பவருக்கும் திருமணம் நடந்தது. இருவரும் அவ்வப்போது சண்டை வந்த நிலையில், இஷா சமைத்த முட்டை குழம்பு நன்றாக இல்லை என்று விபின் குறை சொல்லியுள்ளார்.
இதனை ஆத்திரமடைந்த இஷா , கணவனின் நாக்கை கடித்து துண்டாக்கியுள்ளார். நாக்கு 2.5 செ.மீ அளவுக்கு துண்டிக்கப்பட்டுள்ளதால், அறுவை சிகிச்சை செய்தாலும் மீண்டும் ஒட்ட வைக்க முடியாது என மருத்துவர்கள் கைவிரித்தனர். இதனால் விபின் குமரன் பேசமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து இஷாவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.