தமிழ்நாடு செய்திகள்

தமிழக ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை - அமைச்சர் கோவி செழியன்

Published On 2026-01-22 12:37 IST   |   Update On 2026-01-22 12:37:00 IST
  • தமிழ்நாட்டு மாணவர்களின் அறிவையும் திறமையையும் கொச்சைப்படுத்தி, பொய்களைப் பரப்பி வரும் ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை.
  • சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்கிறேன்.

சென்னை:

உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழக சட்டமன்றத்தின் மாண்பைக் கெடுக்கும் வகையிலும், தமிழுக்கும் தமிழினத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் எதிரான செயல்களையே ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து செய்து வருகிறார்.

தமிழ்நாட்டு மாணவர்களின் அறிவையும் திறமையையும் கொச்சைப்படுத்தி, பொய்களைப் பரப்பி வரும் ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதி இல்லை. எனவே சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்கிறேன்.

இவ்வாறு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கூறினார்.

Tags:    

Similar News