செய்திகள்

ரூ.328.95 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள்- கண்காணிக்க 7 அதிகாரிகள் நியமனம்

Published On 2018-07-08 09:40 GMT   |   Update On 2018-07-08 09:40 GMT
தமிழ்நாட்டில் ரூ.328.95 கோடியில் நடக்கும் 1,151 குடிமராமத்து திட்ட பணிகளை கண்காணிக்க 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை:

குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரிகள் புனரமைப்பு பணி மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்தது. முதற்கட்டமாக ரூ.100 கோடி செலவில் 1513 ஏரிகள் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதன்தொடர்ச்சியாக,  மொத்தம் 328.95 கோடி செலவில் 1511 ஏரிகள் புனரமைப்பு பணிக்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் அனைத்து ஏரிகள் புனரமைப்பு பணிகளை முடிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், ரூ.328.95 கோடியில் நடக்கும் 1,151 குடிமராமத்து திட்ட பணிகள் முறையாக நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்க ககன்தீப் சிங் பேடி, அமுதா, பவன்குமார் பன்சால் உட்பட ஏழு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று உத்தரவிட்டுள்ளார். #IASofficers #TNdesiltingworks
Tags:    

Similar News