செய்திகள்

தேர்தல் ஆணையத்தில் 20-ல் ஆஜர்: கமல் கட்சிக்கு விசில் சின்னம்

Published On 2018-06-04 05:44 GMT   |   Update On 2018-06-04 05:44 GMT
கமல் கட்சியின் பெயர் உறுதியனாதை நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள தேர்தல் ஆணையம் அவரது கட்சி பதிவு தொடர்பாக ஜூன் 20-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. #MakkalNeedhiMaiam #KamalHaasan
சென்னை:

கடந்த ஆண்டு அரசியலுக்குள் நுழைந்த கமல்ஹாசன் அரசியலில் வேகம் எடுத்து வருகிறார். தொடர்ந்து போராட்டங்கள், தலைவர்கள் சந்திப்பு, நிர்வாகிகள் நியமனம் என்று வேகம் காட்டும் கமல் அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் போட்டியிட தயாராகி வருகிறார்.

கடந்த நவம்பரில் மக்கள் நீதி மய்யம் என்னும் அமைப்பை தொடங்கிய கமல் அதை கட்சியாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். இந்த பெயருக்கு ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் மே 31 வரை கெடு கொடுத்து இருந்தது. ஆனால் யாரும் ஆட்சேபணை தெரிவிக்காததால் கமல் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என்ற பெயர் உறுதியானது.

கமல் கட்சியின் பெயர் உறுதியனாதை நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள தேர்தல் ஆணையம் அவரது கட்சி பதிவு தொடர்பாக ஜூன் 20-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. ஜூன் 20-ந் தேதி கமல்ஹாசன் தனது கட்சிக்கான சின்னத்தை கேட்பார் என்று தெரிகிறது.

சின்னத்தின் அடிப்படையில் தேர்தல் நடந்து வருவதால் மக்களுக்கு பரிட்சயமான நெருக்கமான சின்னத்தில் போட்டியிடவே கட்சிகள் ஆர்வம் காட்டும். அதனால் கமல் விசில் சின்னத்தை கேட்கவே வாய்ப்பு அதிகம் என்று கமலுக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

அவர்கள் கூறும்போது ‘கட்சியின் பெயரிலேயே ஆறு கைகள் இணைவது போல ஒரு சின்னம் இருக்கிறது. ஆனால் அதை வாங்கினால் காங்கிரசுக்கு ஓட்டு கேட்பது போல் ஆகிவிடும். சின்னத்தை சொல்லி ஓட்டு கேட்பதும் சிரமம்.

ஆனால் விசில் அப்படி இல்லை. மிக எளிதில் மக்கள் மனதில் பதியும். கமல் ஏற்கனவே விசில் என்ற ஆப் மூலம்தான் தொண்டர்களுடன் இணைந்து வருகிறார். எனவே விசில் சின்னத்தை கேட்கவே வாய்ப்பு அதிகம்’ என்றார்கள்.

கமல் சின்னம் கேட்டாலும் அந்த சின்னத்தை அவர் நிரந்தரமாக அவர் பயன்படுத்த ஒரு தேர்தலிலாவது போட்டியிட்டே ஆக வேண்டும். நிரந்தரமாக சின்னத்தை பெற சில விதிமுறைகள் உள்ளன. பதிவு செய்யப்பட்ட கட்சி ஒரு தேர்தலில் பத்து சதவீத தொகுதிகளில் குறைந்தது போட்டியிட வேண்டும். அப்போது தான் அந்த கட்சிக்கு பொதுவான சின்னம் ஒதுக்கப்படும். #MakkalNeedhiMaiam #KamalHaasan
Tags:    

Similar News