தமிழ்நாடு செய்திகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 22 காளைகளை அடக்கி காரை பரிசாக வென்றார் பாலமுருகன்

Published On 2026-01-15 18:59 IST   |   Update On 2026-01-15 19:09:00 IST
  • பாலமுருகன் 22 காளைகளை அடக்கி முதல் பரிசு வென்றார்.
  • சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.

தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் மாடுகளை அடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து நடத்தப்படும். இதில் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றது.

இவற்றில் பொங்கல் தினமான இன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் காளைகள் அடக்கும் வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதில் வலையாங்குளத்தைச் சேர்ந்த பாலமுருகன் 22 காளைகளை அடக்கி காரை பரிசாக வென்றார்.

17 காளைகள் அடக்கிய அவனியாபுரம் கார்த்திக்கிற்கு 2-வது பரிசாக பைக் வழங்கப்பட்டது. 16 காளைகள் அடக்கிய ரஞ்சித் என்பவருக்கு 3-வது பரிசு வழங்கப்பட்டது.

மந்தை முத்துக்கருப்பன் காளையின் உரிமையாளர் விருமாண்டி சகோதரருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் டிராக்டர் வழங்கப்பட்டது. 12 சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியில் 1000 -க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 600 -க்கும் மேற்பட்ட வீரர்கள் களத்தில் மாடுகளை பிடிக்க களம் இறங்கினர்.

நாளை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். நாளைமறுதினம் பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறும்.

Tags:    

Similar News