கிரிக்கெட்

இடம் கிடைக்கும் என உறுதியாக நம்பி பட்டாசு, ஸ்வீட்ஸ் வாங்கி வைத்திருந்தோம்: ரிங்கு சிங் தந்தை

Published On 2024-05-01 11:36 GMT   |   Update On 2024-05-01 11:36 GMT
  • 15 பேர் கொண்ட அணியில் உறுதியாக இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
  • ரிசர்வ் வீரர்கள் நான்கு பேரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங்கிற்கு 15 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 15 பேர் கொண்ட அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, ஆவேஷ் கான் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தனது மகனுக்கு 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் கிடைக்காதது குறித்து ரிங்கு சிங் தந்தை கூறியதாவது:-

ரிங்கு சிங்கிற்கு 15 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்கும் என முழுமையாக நம்பியிருந்தோம். ரிங்கு சிங் இந்திய அணியில் இடம் பிடிக்கும் சம்பவத்தை கொண்டாட எங்கள் குடும்பத்தினர் ஸ்வீட்ஸ் மற்றும் பட்டாசுகள் வாங்கி வைத்திருந்தோம். ஆனால், ரிங்கு சிங் 15 பேர் கொண்ட அணியில் இடம் பெறவில்லை. ரிசர்வ் வீரர்கள் பட்டியலில்தான் இடம் பிடித்துள்ளார்.

ரிங்கு சிங் அவரது அம்மாவிடம் போனில் இந்திய அணிக்கு தேர்வாகவில்லை எனத் தெரிவித்தார். அப்போது அவர் மனம் உடைந்துவிட்டார்.

இவ்வாறு ரிங்கு சிங் தந்தை தெரிவித்துள்ளார்.

கடந்த உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அதன்பின் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. கடந்த ஐபிஎல் தொடரில் கடைசி ஓவரில் ஐந்து சிக்சர்கள் விளாசி கொல்கத்தா அணியை வெற்றி பெற வைத்தார்.

இதனால் இந்திய அணியில் இடம் பிடித்தார். குறிப்பாக டி20 அணியில் அதிரடியாக விளைாயடி முத்திரை படைத்தார். இதனால் நீண்ட காலம் டி20 இந்திய அணியில் விளையாடுவார் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில்தான் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரிங்கு சிங் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

Tags:    

Similar News