கிரிக்கெட் (Cricket)

ஐசிசி டி20 தரவரிசை: முதல் இந்தியராக சாதனை படைத்த தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி

Published On 2025-12-17 15:07 IST   |   Update On 2025-12-17 15:07:00 IST
  • டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் வருண் சக்ரவர்த்தி 818 புள்ளிகளை பெற்றுள்ளார்.
  • டி20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்ற வீரர் 8-வது வீரர் ஆவார்.

ஆடவருக்கான தரவரிசை பட்டியலை சிறிய மாற்றத்துடன் ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதில் டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி முதலிடத்தில் தொடர்கிறார்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக பந்துவீசிய நிலையில், வருண் சக்ரவர்த்தி 818 புள்ளிகளை பெற்று அசத்தியுள்ளார். இதன் மூலம் டி20 பந்து வீச்சாளர்கள் தரவரிசை புள்ளிகளில் அதிக புள்ளிகள் பெற்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை வருண் சக்கரவர்த்தி படைத்துள்ளார்.

மேலும் டி20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்ற வீரர் 8-வது வீரர் என்ற சாதனையை வருண் சக்கரவர்த்தி படைத்துள்ளார். இந்த பட்டியலில் பாகிஸ்தான் வீரர் உமர் குல் (865 புள்ளிகள்) முதல் இடத்தில் உள்ளார்.

டி20 பந்து வீச்சாளர் தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்ற வீரர்கள்:-

உமர் குல் (பாகிஸ்தான்) 865

சாமுவேல் பத்ரீ (வெஸ்ட் இண்டீஸ்) 864

டேனியல் வெட்டோரி (நியூசிலாந்து) 858

சுனில் நரைன் (வெஸ்ட் இண்டீஸ்) 832

ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) 828

தப்ரைஸ் ஷம்சி (தென்னாப்பிரிக்கா) 827

ஷாஹித் அப்ரிடி (பாகிஸ்தான்) 822

வருண் சக்ரவர்த்தி (இந்தியா) 818

ஷதாப் கான் (பாகிஸ்தான்) 811

வனிந்து ஹசரங்கா (இலங்கை) 809

Tags:    

Similar News