கிரிக்கெட் (Cricket)

4-வது டி20 போட்டியில் இருந்து சுப்மன் கில் விலகல்! - சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

Published On 2025-12-17 19:39 IST   |   Update On 2025-12-17 19:39:00 IST
  • இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது
  • 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்று நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் கட்டாக்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியாவும், நியூ சண்டிகாரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. தர்மசாலாவில் நடந்த 3-வது ஆட்டத்தில் மீண்டும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்று நடைபெறுகிறது.

இந்த போட்டியிலிருந்து காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய வீரர் சுப்மன் கில் விலகியுள்ளார். இதனால் சஞ்சு சாம்சனுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

பனிமூட்டம் காரணமாக இப்போட்டியில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News