U19 உலகக் கோப்பை அரையிறுதியில் நுழைவது யார்?: பாகிஸ்தானுக்கு 253 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்ததுஇந்திய அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 252 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
U19 உலகக் கோப்பை அரையிறுதியில் நுழைவது யார்?: பாகிஸ்தானுக்கு 253 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
Published on

19 வயதுக்கு உட்பட்டவருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் 16 நாடுகள் பங்கேற்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டன.

கடந்த 23-ம் தேதி லீக் ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் ஜப்பான், அமெரிக்கா, ஸ்காட்லாந்து, தான்சானியா ஆகிய 4 நாடுகள் வெளியேற்றப்பட்டன.

சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு 12 நாடுகள் தகுதி பெற்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டன. குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, அயர்லாந்து ஆகிய அணிகளும், குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்காளதேசம், நியூசிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகளும் இடம் பெற்றன.

குரூப் 1 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா முதல் இடத்தையும், ஆப்கானிஸ்தான் 2-வது இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து 8 புள்ளிகள் பெற்று அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. 2-வது அணி எது என்பதற்கான ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று விளையாடி வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 252 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக வேதாந்த் திரிவேதி 68 ரன்கள் அடித்தார்.

பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது சய்யாம், அப்துல் சுப்ஹான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 253 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களமிறங்கவுள்ளது.

இந்திய அணி 6 புள்ளியுடன் இருக்கிறது. பாகிஸ்தானை வீழ்த்தினால் 8 புள்ளியுடன் அரையிறுதிக்கு தகுதி பெறும். பாகிஸ்தான் 4 புள்ளியுடன் உள்ளது. அந்த அணி வெற்றி பெற்றால் இரு அணிகளும் சம புள்ளிகள் பெறும். ரன் ரேட் அடிப்படையில் ஒரு நாடு தகுதி பெறும். பாகிஸ்தானை விட இந்தியா ரன் ரேட்டில் நல்ல நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com