கிரிக்கெட்

நடப்பு தொடரில் 500 ரன்கள்: சாதனை படைத்த விராட் கோலி

Published On 2024-04-28 13:38 GMT   |   Update On 2024-04-28 13:38 GMT
  • 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது.
  • விராட் கோலி, வில் ஜாக்ஸ் ஜோடி அதிரடியாக ஆடி பெங்களூரு அணியை வெற்றிபெற வைத்தது.

அகமதாபாத்:

ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத்தில் இன்று நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 200 ரன்களை குவித்தது. சாய் சுதர்சன் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷாருக் கான் 30 பந்தில் 58 ரன்கள் குவித்தார்.

201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. டூ பிளசிஸ் 24 ரன்னில் அவுட்டானார். 2வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த வில் ஜாக்ஸ் அதிரடியில் மிரட்டினார். இறுதியில், பெங்களூரு அணி 16 ஓவரில் 206 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. வில் ஜாக்ஸ் 41 பந்தில் 10 சிக்சர், 5 பவுண்டரியுடன் சதமடித்து அசத்தினார். விராட் கோலி 70 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் 500 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார் விராட் கோலி. இவர் 10 போட்டிகளில் விளையாடி 501 ரன்கள் குவித்துள்ளார்.

Tags:    

Similar News