முதல் டி20 போட்டி: இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து
- முதலில் பேட் செய்த இலங்கை அணி 16.3 ஓவரில் 133 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய இங்கிலாந்து டக் வொர்த் லூயிஸ் முறைப்படி 11 ரன் வித்தியாசத்தில் வென்றது.
பல்லேகலே:
இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது.
முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கான முதல் டி20 போட்டி பல்லேகலேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்
தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 17 ஓவராகக் குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 16.3 ஓவரில் 133 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குசால் மெண்டிஸ் 37 ரன்னும், பதும் நிசங்கா 23 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித், சாம் கர்ரன் தலா 3 விக்கெட்டும், லியாம் டாசன், ஜேமி ஓவர்டன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் 46 ரன்னில் அவுட்டானார். டாம் பெண்டன் 29 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், இங்கிலாந்து 15 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் டக்வொர்த் லூயிஸ் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி, இங்கிலாந்து அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.