கிரிக்கெட்

ருதுராஜ் கெய்க்வாட்டிடம் மன்னிப்பு கேட்ட ஜெய்ஸ்வால்

Published On 2023-11-27 07:07 GMT   |   Update On 2023-11-27 07:07 GMT
  • 2-வது போட்டியில் ஜெய்ஸ்வால், ருதுராஜ், இஷான் கிஷன் ஆகியோர் அரைசதம் விளாசி அசத்தினர்.
  • 2-வது டி20 போட்டியில் ஆட்டநாயகனாக ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டார்.

5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதி வருகின்றனர். இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இதனையடுத்து 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 235 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால், ருதுராஜ், இஷான் கிஷன் ஆகியோர் அரைசதம் விளாசி அசத்தினர். இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் ஆட்டநாயகனாக ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டார். 

இந்நிலையில் முதல் டி20 போட்டியில் ருதுராஜ் பந்து ஏதும் சந்திக்காமலே ரன் அவுட் முறையில் வெளியேறினார். இதற்கு ருதுராஜ் கெய்க்வாட்டிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

முதல் டி20 போட்டியில் தவறு செய்து விட்டேன். மன்னித்து விடுங்கள் ருது பாய். அது என் தவறு என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ருதுராஜ் அடக்கம் மற்றும் மிகவும் அரவணைக்கக் கூடியவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News