கிரிக்கெட்

3-வது டெஸ்டில் இருந்து கே.எல். ராகுல் விலகல்: இடது கை பேட்ஸ்மேன் சேர்ப்பு

Published On 2024-02-13 01:37 GMT   |   Update On 2024-02-13 01:37 GMT
  • முதல் போட்டியின்போது கே.எல். ராகுலுக்கு காயம் ஏற்பட்டது.
  • 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடாத நிலையில், கடைசி 3 போட்டிக்கான அணியில் இடம் பிடிப்பு.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல். ராகுல் விளையாடினார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது

இதனால் இரண்டாவது போட்டியில் அவர் இடம் பெறவில்லை. இந்த நிலையில் காயம் சரியாகி உடல் தகுதி பெற்றதால் அடுத்த மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடித்து இருந்தார்.

இந்த நிலையில் நாளை மறுநாள் ராஜ்கோட்டில் தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கே.எல். ராகுல் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் நூறு சதவீதம் உடல் தகுதி பெறவில்லை என்பதால் முழுமையாக குணமடைவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

23 வயதான இடது கை பேட்ஸ்மேன் ஆன தேவ்தத் படிக்கல் ரஞ்சி டிராபியில் சிறப்பாக விளையாடியதால் அணியில் இடம் கிடைத்துள்ளது. தேவ்தத் படிக்கல் பஞ்சாப் அணிக்கெதிராக 193 ரன்களும், கோவா அணிக்கு எதிராக 103 ரன்களும் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் மூன்று இன்னிங்சில் 105, 65, 21 என ரன்கள் அடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News