கிரிக்கெட் (Cricket)

ஏபிடி வில்லியர்ஸ்- அப்ரிடியின் சாதனைகளை முறியடித்த சூர்யவன்ஷி

Published On 2025-12-24 11:46 IST   |   Update On 2025-12-24 11:46:00 IST
  • சூர்யவன்ஷி 36 பந்தில் சதம் விளாசினார்.
  • லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதம் விளாசிய இளம் வீரர் என்ற சாதனையை வைபவ் படைத்துள்ளார்.

33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 'பிளேட்' வகைப்பிரிவில் இன்று பீகார் - அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் முதலில் பீகார் அணி பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. இந்த அணியில் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி இடம் பெற்று தொடக்க வீரராக விளையாடினார்.

எப்போதும் போல தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் 36 பந்தில் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து விளையாடிய அவர் இரட்டை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 190 ரன்களில் ஆட்டமிழந்தார். இரட்டை சதத்தை தவறவிட்டாலும் பல சாதனைகளை அவர் படைத்துள்ளார்.

சதம் அடித்ததன்மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதம் விளாசிய இளம் வீரர் என்ற சாதனையை வைபவ் படைத்துள்ளார்.

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சதம் அடித்த இளம் வீரர்கள்:-

வைபவ் சூர்யவன்ஷி - 14 ஆண்டுகள் 272 நாட்கள் (2025)

ஜஹூர் இலாஹி - 15 ஆண்டுகள் 209 நாட்கள் (1986)

ரியாஸ் ஹாசன் - 16 ஆண்டுகள் 9 நாட்கள் (2018)

மேலும் 36 பந்தில் சதம் விளாசியதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் குறைந்த பந்தில் சதம் விளாசிய 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை வைபவ் படைத்துள்ளார். முதல் இடத்தில் அன்மோல்ப்ரீத் சிங் 35 பந்தில் அருணாச்சல பிரதேசம் அணிக்கு எதிராக கடந்த 2024-ம் ஆண்டில் அடித்திருந்தார்.

இந்தியர்களின் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதத்தின் பட்டியல்:

35 - அன்மோல்ப்ரீத் சிங், பஞ்சாப் vs அருணாச்சல பிரதேசம், 2024

36 - வைபவ் சூரியவன்ஷி, பீகார் vs அருணாச்சல பிரதேசம், இன்று

40 - யூசுப் பதான், பரோடா vs மகாராஷ்டிரா, 2010

41 - உர்வில் படேல், குஜராத் vs அருணாச்சல பிரதேசம், 2023

42 - அபிஷேக் சர்மா, பஞ்சாப் vs மத்திய பிரதேசம், 2021

ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் குறைந்த பந்தில் சதம் விளாசிய பாகிஸ்தான் வீரர் அப்ரிடியின் சாதனையை வைபவ் முறியடித்துள்ளார். 1996-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 37 பந்துகளில் ஷாஹித் அப்ரிடி சதம் அடித்திருந்தார்.

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம்

29 பந்துகள் - ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க்

31 பந்துகள் - ஏபி டி வில்லியர்ஸ்

35 பந்துகள் - அன்மோல்பிரீத் சிங்

36 பந்துகள் - கோரி ஆண்டர்சன்

36 பந்துகள் - வைபவ் சூர்யவன்ஷி

37 பந்துகள் - ஷாஹித் அப்ரிடி

குறைந்த பந்தில் அதிவேக 150 ரன்கள் குவித்த தென் ஆப்பிரிக்கா வீரர் ஏபிடி வில்லியர்ஸ் சாதனையை வைபவ் முறியடித்துள்ளார்.

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக 150 ரன்கள் அடித்த வீரர்கள்:-

59 பந்துகள் - வைபவ் சூர்யவன்ஷி vs அருணாச்சல பிரதேசம் (2025)

64 பந்துகள் - ஏபி டிவில்லியர்ஸ் vs மேற்கிந்திய தீவுகள் (2015)

65 பந்துகள் - ஜோஸ் பட்லர் vs நெதர்லாந்து (2022)

Tags:    

Similar News