ஒரே ஓவரில் 5 விக்கெட்: வரலாற்று சாதனை படைத்த இந்தோனேசியா வீரர்
- கம்போடியா அணி 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- பிரியந்தனா ஒரு ஓவரில் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
பாலி:
இந்தோனேசியா, கம்போடியா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி பாலி நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற கம்போடியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்தோனேசிய அணி 168 ரன்கள் எடுத்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கம்போடியா அணி 15 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது.
16 வது ஓவரை கெடே பிரியந்தனா வீசினார். அந்த ஓவரில் முதல் 3 பந்துகளில் 3 விக்கெட் வீழ்த்தி ஹாட்ரிக் எடுத்தார். 4 வது பந்தில் விக்கெட் வீழ்த்தவில்லை. 5வது மற்றும் 6வது பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தோனேசியா அணியை வெற்றி பெற செய்தார்.
கெடே பிரியந்தனா ஒரு ஓவரில் ஒரு ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை கெடே பிரியந்தனா படைத்தார்.
ஏற்கனவே, நட்சத்திர பந்துவீச்சாளர்களான மலிங்கா , ரஷீத் கான் ஆகியோர் ஒரு ஓவரில் 4 விக்கெட் வீழ்த்தியிருந்த நிலையில், கெடே பிரியந்தனா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார்.