கிரிக்கெட் (Cricket)

மீண்டும் இரட்டை சதத்தை தவறவிட்ட சூர்யவன்ஷி

Published On 2025-12-24 11:20 IST   |   Update On 2025-12-24 11:20:00 IST
  • வைபவ் சூர்யவன்ஷி 84 பந்தில் 190 ரன்கள் விளாசியுள்ளார்.
  • இதில் 16 பவுண்டரிகளும் 15 சிக்சர்களும் அடங்கும்.

33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது.

'பிளேட்' வகைப்பிரிவில் நாகாலாந்து, பீகார், மிசோரம், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகள் அங்கம் வகிக்கின்றன. அவை தங்களுக்குள் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் அணி அடுத்த ஆண்டு எலைட் வகைப் பிரிவுக்கு ஏற்றம் பெறும். எலைட் பிரிவில் கடைசி இடத்துக்கு தள்ளப்படும் அணி அடுத்த ஆண்டு பிளேட் வகைப்பிரிவுக்கு தரம் இறக்கப்படும்.

இந்நிலையில் இந்த பிரிவில் பீகார் - அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் முதலில் பீகார் அணி பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. இந்த அணியில் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி இடம் பெற்று தொடக்க வீரராக விளையாடி வருகிறார்.

இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த வைபவ், இரட்டை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 190 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 10 ரன்னில் தனது இரட்டை சதத்தை வைபவ் தவறவிட்டார். அவர் 84 பந்தில் 190 ரன்கள் விளாசினார். இதில் 16 பவுண்டரிகளும் 15 சிக்சர்களும் அடங்கும்.

இதற்கு முன்பு u19 ஆசிய கோப்பை தொடரில் யுஏஇ அணிக்கு எதிரான போட்டியில் 171 ரன்களில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News