கிரிக்கெட் (Cricket)

ஐபிஎல்-லில் ஏலம் போகாத ஒடிசா வீரர் இரட்டை சதம் விளாசி அசத்தல்

Published On 2025-12-24 14:14 IST   |   Update On 2025-12-24 14:14:00 IST
  • விஜய் ஹசாரே தொடரில் நடக்கும் லீக் போட்டி ஒன்றில் ஒடிசா- சவுராஸ்டிரா அணிகள் மோதி வருகின்றனர்.
  • இதில் ஒடிசா வீரர் ஸ்வஸ்திக் இரட்டை சதம் விளாசினார்.

33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இதன் 'எலைட்' வகைப்பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'பிளேட்' வகைப்பிரிவில் நாகாலாந்து, பீகார், மிசோரம், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகள் அங்கம் வகிக்கின்றன.

இந்நிலையில் இன்று நடக்கும் ஒரு லீக் போட்டியில் ஒடிசா- சவுராஸ்டிரா அணிகள் மோதி வருகின்றனர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஒடிசா அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 345 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்வஸ்திக் சமல் 212, சாமந்த்ரே 100 ரன்கள் எடுத்தனர்.

இதன்மூலம் விஜய் ஹசாரே தொடரில் இரட்டை சதம் விளாசி ஸ்வஸ்திக் சமல் சாதனை படைத்துள்ளார். மேலும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 14-வது இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

இவரை ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News