கிரிக்கெட் (Cricket)

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு

Published On 2025-12-24 10:35 IST   |   Update On 2025-12-24 10:35:00 IST
  • ஒருநாள் தொடருக்கு பிரேஸ்வெல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • டி20 அணிக்கு மிட்செல் சான்ட்னர் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக அடுத்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் ஜனவரி 11-ந் தேதி தொடங்கி 18-ந் தேதி முடிவடைகிறது. அதனை தொடர்ந்து டி20 தொடர் ஜனவரி 21-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி முடிவடைகிறது.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் தொடருக்கு பிரேஸ்வெல் கேப்டனாகவும் டி20 அணிக்கு மிட்செல் சான்ட்னர் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒருநாள் போட்டி:

பிரேஸ்வெல் (கேப்டன்), ஆதி அசோக், கிறிஸ்டியன் கிளார்க், ஜோஷ் கிளார்க்சன், கான்வே, ஃபௌல்க்ஸ், மிட்ச் ஹே, ஜேமிசன், நிக் கெல்லி, ஜெய்டன் லெனாக்ஸ், டேரில் மிட்செல், நிக்கோல்ஸ், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் ரே, வில் யங்.

டி20 போட்டி:

மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), பிரேஸ்வெல், சாப்மேன், கான்வே, டஃபி, ஃபௌல்க்ஸ், மேட் ஹென்றி, ஜேமிசன், பெவன் ஜேக்கப்ஸ், டேரில் மிட்செல், நீசம், பிலிப்ஸ், ரச்சின், டிம் ராபின்சன், சோதி

Tags:    

Similar News