சஞ்சு சாம்சன் தொடர்ந்து ஒயிட் பால் அணியில் விளையாட வேண்டும்: கங்குலி
- சஞ்சு சாம்சன் மைதானத்தில் நுழைந்தால், எதிரணியை காயப்படுத்துவார்.
- தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அவர் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடினார்.
கேரளாவைச் சேர்ந்த 31 வயதான சஞ்சு சாம்சன் கடந்த 2015-ம் ஆண்டு தனது 20 வயதில் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். ஆனால் அவருக்கு தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் தொடக்க வீரர் இவர்தான் என்று இந்திய அணி முடிவு செய்தது. ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோசமாக விளையாடியதால் இஷான் கிஷனை தொடக்க வீரராக களம் இறக்கியது. இதனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
பின்னர் எப்படியோ அணியில் வாய்ப்பு கிடைத்தது. ஜிம்பாப்வே அணிக்கெதிராக குறைந்த பந்தில் அதிக ரன்கள் அடித்தார். நேற்று வாழ்வா? சாவா? போட்டியில் முத்திரை பதித்தார். 50 பந்தில் 97 ரன்கள் விளாசி தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 196 இலக்கை இந்திய அணி எட்ட முக்கிய காரணமாக இருந்தார்.
இந்திய அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து சஞ்சு சாம்சனை முன்னாள், இன்னாள் வீரர்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் சஞ்சு சாம்சன் குறித்து கங்குலி கூறியதாவது:-
சஞ்சு சாம்சன் ஒரு சிறந்த வீரர். தொடர்ந்து இந்தியாவுக்காக ஒயிட்பால் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். அவர் அப்படிப்பட்ட வீரர். அவர் மைதானத்தில் நுழைந்தால், எதிரணியை காயப்படுத்துவார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அவர் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடினார், அதுதான் முக்கியம்.
இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.