கிரிக்கெட்

2வது ஒருநாள் போட்டி.. தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா

Published On 2023-09-24 00:18 GMT   |   Update On 2023-09-24 00:18 GMT
  • முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
  • 2-வது ஒருநாள் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம்.

ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் துவங்க இருக்கிறது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. அந்த வரிசையில், இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருக்கும் ஆஸ்திரேலியா அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இந்த தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் துவங்க இருக்கிறது. இந்த போட்டி மத்திய பிரதேசம் மாநிலத்தின் இந்தூரில் நடைபெற இருக்கிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து, இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.

இன்றைய போட்டியை பொருத்த வரை இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக முகமது சிராஜ் களமிறங்கலாம் என்று தெரிகிறது. இதே போன்று குல்தீப் யாதவுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் களமிறங்குவார் என்று தெரிகிறது.

எதிர்பார்க்கப்படும் இந்திய அணியின் ஆடும் லெவன்: 

ருதுராஜ் கெய்க்வாட்/இஷான் கிஷன், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அய்யர், சூரியகுமார் யாதவ், கே.எல். ராகுல் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ்/ஜஸ்பிரித் பும்ரா.

Tags:    

Similar News