கிரிக்கெட் (Cricket)

இன்னும் 6 முறை: சச்சினின் மெகா சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி

Published On 2026-01-13 09:28 IST   |   Update On 2026-01-13 09:28:00 IST
  • நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
  • இந்த போட்டியின் ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல்போட்டி வதோதராவில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 300 ரன்கள் குவித்து, இந்தியாவிற்கு 301 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அதனைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 49 ஓவரில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த போட்டியில் 93 ரன்கள் எடுத்த விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதன்மூலம் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற 2-வது வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். விராட் 71 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். முதல் இடத்தில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். அவர் 75 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.

3 முதல் 5 இடங்கள் முறையே இலங்கை வீரர் ஜெயசூர்யா (58), தென் ஆப்பிரிக்கா வீரர் கல்லீஸ் (57) இலங்கை வீரர் சங்ககாரா (50) ஆகியோர் உள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் சச்சினுக்கு அடுத்தப்படியாக விராட் கோலி 2-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News