கிரிக்கெட்

சிஎஸ்கேவை மட்டும் வீழ்த்தினால் கோப்பை கிடைக்காது- முன்னாள் சி.எஸ்.கே வீரர் ராயுடு கிண்டல்

Published On 2024-05-23 10:10 GMT   |   Update On 2024-05-23 10:10 GMT
  • தொடர்ந்து 17 ஆண்டுகளாக பெங்களூரு அணியின் கோப்பை கனவு தகர்ந்துள்ளது.
  • நாங்கள் (சி.எஸ்.கே.) 5 முறை சாம்பியன்" என்று ராயுடு பதிவிட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்று 1-ல் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின.

அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து ராஜஸ்தான் அணி 19 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த தோல்வியின் மூலம் தொடர்ந்து 17 ஆண்டுகளாக பெங்களூரு அணியின் கோப்பை கனவு தகர்ந்துள்ளது.

இந்நிலையில், ஆர்சிபி அணியின் கோப்பை கனவை அடையாமல் ஐபிஎல்-ல் இருந்து தினேஷ் கார்த்திக் ஓய்வை அறிவித்திருக்கிறார்.

பெங்களூரு அணியின் தோல்வியை சென்னை அணி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மீம்களாக வெளியிட்டு கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், பெங்களூரு அணியின் தோல்வி குறித்து முன்னாள் சி.எஸ்.கே. வீரர் ராயுடு காட்டமாக விமர்சித்துள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் பேட்டி அளித்த ராயுடு, "கொண்டாட்டங்களாலும், ஆக்ரோஷத்தினாலும் ஐபிஎல் கோப்பைகள் வெல்லப்படுவதில்லை. சிஎஸ்கேவை மட்டும் வீழ்த்தி ஐபிஎல் கோப்பைகள் கைப்பற்றப்படுவதில்லை. கோப்பையை வெல்ல பிளே ஆஃப்களிலும் சிறப்பாக விளையாட வேண்டும்.

திறமையான இந்திய வீரர்களை பெங்களூரு அணி கண்டுபிடிக்க வேண்டும். திறமையான இந்திய வீரர்களை கண்டுபிடித்ததால் தான் சென்னை, மும்பை, கொல்கத்தா அணிகள் வெற்றிகரமான அணிகளாக உள்ளது என்பதை பெங்களூரு அணி உணர வேண்டும்" என்று பேசியுள்ளார்.

இது மட்டுமின்றி தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் கடந்த முறை கோப்பை வென்ற சென்னை அணி வீரர்களின் வீடியோ ஒன்றையும் ராயுடு பகிர்ந்துள்ளார். அதில், சில சமயங்களில் சிலவற்றை நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. நாங்கள் (சி.எஸ்.கே.) 5 முறை சாம்பியன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Full View

Tags:    

Similar News