கிரிக்கெட் (Cricket)

தோனியிடம் முடிந்த வரை நிறைய கற்றுக்கொள்வேன்- சிஎஸ்கே வீரர் பிரசாந்த் வீர்

Published On 2025-12-17 11:30 IST   |   Update On 2025-12-17 11:30:00 IST
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைவதில் மகிழ்ச்சி.
  • பேட்டிங்கில் பின்வரிசையில் ஆடுவது எளிதல்ல.

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் நேற்று நடந்தது. இந்த ஏலத்தில் பிரசாந்த் வீர் என்ற (அன்கேப்ட் வீரர்) ஆல் ரவுண்டர் வீரரை சி.எஸ்.கே. அணி 14.20 கோடிக்கு ஏலம் போனார். இவரின் ஆரம்ப விலை ரூ.30 லட்சம் ஆகும். ஜடேஜாவிற்கு மாற்றாக பிரசாந்த் வீர் இருப்பர் என்று சி.எஸ்.கே அணி எதிர்பார்த்து இந்த விலையை கொடுத்துள்ளது.

இதனையடுத்து ராஜஸ்தானை சேர்ந்த 19 வயதான கார்த்திக் சர்மா (அன்கேப்ட் வீரர்) அடிப்படை விலை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.14.20 கோடிக்கு ஏலம் போனார். இவரையும் சிஎஸ்கே அணி ஏலம் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன 2 அன்கேப்ட் வீரர் வீரர்களையும் சி.எஸ்.கே அணி வாங்கியுள்ளது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைவதில் மகிழ்ச்சி என பிரசாந்த் வீர் கூறியுள்ளார். இது குறித்து பிரஷாந்த் வீர் கூறுகையில், 'சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைவதில் மகிழ்ச்சி. ஏனெனில் அங்கு டோனி இருக்கிறார். பேட்டிங்கில் பின்வரிசையில் ஆடுவது எளிதல்ல. அதை சிறப்பாக செய்வது தான் அவரது ஸ்பெஷல். அவரிடம் இருந்து முடிந்த வரை நிறைய கற்றுக்கொள்வேன். அவரிடம் இருந்து 4-5 சதவீதம் கற்றுக்கொண்டாலும் கூட எனக்கு பயனுள்ளதாக இருக்கும்' என்றார்.

Tags:    

Similar News