கிரிக்கெட் (Cricket)

கோலி, கே.எல். ராகுல் அதிரடி சதம்.. பாக். அணிக்கு 357 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

Published On 2023-09-11 18:42 IST   |   Update On 2023-09-11 18:42:00 IST
  • இந்திய அணியின் விராட் கோலி, கே.எல். ராகுல் சதம் அடித்து அசத்தல்.
  • பாகிஸ்தான் தரப்பில் ஷகீன் அஃப்ரிடி மற்றும் ஷதாப் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வருகிறது. சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று பலப்பரீட்சையில் நடத்தின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர்.

இந்த ஜோடி முறையே 56 மற்றும் 58 ரன்களை குவித்து அசத்தினர். அடுத்த வந்த விராட் கோலி மற்றும் கே.எல். ராகுல் ஜோடி நிலைத்து நின்று ஆடியது. இடையில் மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டு, பிறகு இன்று மதியம் துவங்கியது. இன்றைய ஆட்டத்திலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி மற்றும் கே.எல். ராகுல் ஜோடி சதம் அடித்து அசத்தியது.

இதன் காரணமாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 356 ரன்களை குவித்தது. இந்திய சார்பில் விராட் கோலி 122 ரன்களையும், கே.எல். ராகுல் 111 ரன்களையும் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷகீன் அஃப்ரிடி மற்றும் ஷதாப் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

Tags:    

Similar News